Advertisment

குடிநீர் ஆலைகள் விவகாரம் : 2 வாரங்களில் 690 விண்ணப்பங்களை பரிசீலிக்க உத்தரவு!

இதனையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 30 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Illegal bore-wells : All applications should be reviewed

Illegal bore-wells : All applications should be reviewed

Illegal bore-wells : All applications should be reviewed within 2 weeks says MHC to TN government :

Advertisment

நிலத்தடி நீரை எடுக்க உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள 690 குடிநீர் ஆலைகளின் விண்ணப்பங்களை பரிசீலித்து 2 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.  சட்டவிரோத குடிநீர்ஆலைகளை மூடக்கோரி சென்னை புழலைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, உரிய அனுமதியின்றியும் உரிமம் இன்றி சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளை உடனடியாக மூட உத்தரவிட்டனர்.  பின்னர், உரிமம் கோரி விண்ணப்பித்த குடிநீர் அலைகளிடம் 50 ஆயிரம் ரூபாய் டிபாசிட் (வைப்பு தொகை) பெற்று அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, இன்று மீண்டும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிலத்தடி நீர் எடுக்க உரிமம் கேட்டு 1,054 விண்ணப்பங்கள் வர பெற்றுள்ளதாகவும், அதில் 690 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்க தகுதி உடையதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

மேலும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி நிலத்தடி நீர் இருப்பு அளவை அறிந்து அதன் அடிப்படையில் உரிமம் வழங்குவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இரண்டு வாரங்களில் உரிமம் கூறிய விண்ணப்பங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், தவறினால் சம்பந்தப்பட்ட துறை ஊழியர் முதல் அதிகாரிகள் வரை ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது எனத் தெரிவித்தார்.  அப்போது அரசு வழக்கறிஞர் மனுதராரின் இந்த குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.  இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.

கொரோனா வைரஸ் பரவுவதாக வரும் தகவலை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் மக்களுக்கு குடிநீர் வினியோகத்தை அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினார். அப்போது, அரசு வழக்கறிஞர் சென்னை மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 2024 ஆம் ஆண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு மழையை எதிர் பாராமல், பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 30 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க : கொரோனா பரவலைத் தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை கோரி வழக்கு; உயர் நீதிமன்றம் மறுப்பு

Chennai High Court Madras
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment