தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் எடுப்பு வழக்கு தொடர்பாக 3 தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு அமலாக்க இயக்குநரகம் (இ.டி) அனுப்பிய சம்மன்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்து உத்தரவிட்டது.
அமலாக்கத்துறை இயக்குநரகம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் வழங்கப்பட்ட சம்மன்களை எதிர்த்து ஒப்பந்ததாரர்கள் ஏ. ராஜ்குமார், சண்முகம் ராமச்சந்திரன் மற்றும் கே. ரெத்தினம் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, சம்மன்களுக்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ். இளம்பாரதி, இ.டி அமலாக்க வழக்கு (ECIR) பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய 4 வழக்குகளுடன் மனுதாரர்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என்று வாதிட்டார்.
மேலும், மனுதாரர்களுக்கு டிசம்பர் 11, 2023 தேதியிட்டு அனுப்பப்பட்ட சம்மன்கள் தெளிவாக இல்லை மற்றும் அவர்கள் சாட்சிகளாக அழைக்கப்பட்டார்களா அல்லது குற்றம் சாட்டப்பட்டார்களா என்பது குறித்த நோக்கத்தை வெளியிடவில்லை என்று கூறினார்.
“இந்த சம்மன்கள் வழங்குவது சட்ட செயல்முறையின் அப்பட்டமான துஷ்பிரயோகம் மட்டுமல்ல, அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்” என்று வழக்கறிஞர் கூறினார்.
இந்த மனுக்களை எதிர்த்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், இந்த வழக்கு தொடர்பாக சில விளக்கங்களைப் பெறவே மனுதாரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களா அல்லது சாட்சிகளா என்பதை தற்போது அமலாக்கத்துறையால் கூற முடியாது என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அமலாக்கத்துறை இயக்குநரகம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் வழங்கப்பட்ட சம்மன்களை எதிர்த்து ஒப்பந்ததாரர்கள் ஏ. ராஜ்குமார், சண்முகம் ராமச்சந்திரன் மற்றும் கே. ரெத்தினம் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, சம்மன்களுக்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“