தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஜுன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று. நேற்று கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு துறை வாரியான மானியக் கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்றது.
நேற்று, சட்டப் பேரவையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாரயம் அருந்தி 60 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 150க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதன் பின்னணியில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் சு.முத்துசாமி தாக்கல் செய்தார். கள்ளச் சாராயம் தயாரித்தால், விற்றால் தண்டனைனை கடுமையாக்கும் வகையில், மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது, தற்போதுள்ள 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி விதிகளை மீறி மது இறக்குமதி செய்துவது, ஏற்றுமதி செய்வது, அருந்துதல் ஆகிய குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது.
கள்ளச் சாராயத்தை தயாரிக்கவும், கொண்டு செல்வற்கும், வைத்திருப்பதற்கும், நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கள்ளச் சாராயம் அருந்தி மரணம் ஏற்பட்டால், கள்ளச் சாராயம் தயாரித்து விற்றவருக்கு ஆயுள்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.
இதேபோல குற்றங்கள் பயன்படுத்தும் அனைத்து அசையும் சொத்துகளையும் பறிமுதல் செய்வதோடு மது அருந்த பயன்படுத்தப்படும் உரிமம் இல்லாத இடங்களை மூடி சீலிடவும் வழிவகை செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“