தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 380 கி.மீ தொலைவிலும் நாகையில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் ஃபீஞ்சல் புயலாக வலுவடைந்து, வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் கரையை கடக்கும் போது 90 கி.மீ வேகத்தில் காற்றுவீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் புயல் எப்போது உருவாகும்? எங்கெல்லாம் மழை பெய்யும்? என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே புயல் கரையை கடக்கும். இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், அதிகனமழையும் பெய்யக்கூடும். புயல் கரையைக் கடக்கும் போது பலத்தக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில், அவ்வப்போது 90 கி.மீ வீசக்கூடும்.
சென்னையில் தென் கிழக்கே 400 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது. புயலாக வலுப்பெறாது என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் இயற்கையில் திடீர் மாற்றம்" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“