scorecardresearch

23-ம் தேதி வரை தமிழகம், புதுவையில் கடும் வெயில்: 10- 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

ஏப்ரல் 23 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்பட்டவர்கள் வெயிலில் பயணிப்பதை தவிர்க்கவும்

heat_wave

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 23ஆம் தேதி வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நோய்வாய் பட்டவர்கள், முதியவர்கள், சிறுவர்கள் குழந்தைகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் நடமாட வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படியுங்கள்: சென்னை பிராட்வே கட்டிட விபத்து; உரிமையாளர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது, இந்திய வானிலை ஆராய்ச்சி மையமானது எதிர்வரும் ஏப்ரல் 20.04.2023, 21.04.2023. 22.04.2023 மற்றும் 23.04.2023 ஆம் நாட்களில் தமிழகம் மற்றும் புதுவை பிராந்தியத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும், இதனால் பொது மக்களுக்கு பாதிப்புகள் இல்லை என்ற போதிலும் இந்த அதிகமான வெப்பத்தால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்பட்டவர்கள் பாதிக்கப்படக்கூடும் என அனுமானித்துள்ளது.

காரைக்கால் ஆட்சியர் குலோத்துங்கன்

எனவே காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்பட்டவர்கள் வெயிலில் பயணிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Imd heat wave alerts to tamilnadu puducherry till april 23

Best of Express