வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபனி புயல் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன், "ஃபனி புயல் நாளை அதிவேக புயலாக உருவெடுக்கும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இப்போது அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.
இந்த புயல் நாளை அதி தீவிர புயலாக வலுப்பெறும். 29-ம் தேதி வடதமிழகம் தெற்கு ஆந்திரப் பகுதி நோக்கி நகரக்கூடும். மேலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஏப் 30, மே 1ம் தேதிகளில் மிதமான மழை பெய்யும்" என்று தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க - Fani cyclone chennai live updates: ஃபனி புயல் லைவ் அப்டேட்ஸ்
இந்நிலையில், இந்திய வானிலை மையம் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ள புயல் எச்சரிக்கை பதிவில், "ஃபனி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் கடுமையான சூறாவளி புயலாக உருமாற வாய்ப்புள்ளது. அடுத்த 72 மணி நேரத்தில், அதாவது ஏப்ரல் 30ம் தேதி மாலை வட கடலோர தமிழகம் மற்றும் தெற்கு கடலோர ஆந்திராவையும் நெருங்க வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை மைய எச்சரிக்கை பதிவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்