அக்டோபர் 21-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ள்தாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 14-ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மழைப்பொழிவு காணப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வரும் 22-ஆம் தேதி அந்தமானை ஒட்டிய வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதேபோல், அரபிக் கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், கணிக்கப்பட்டத்ற்கு மாற்றாக ஒரு நாளுக்கு முன்பே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 23-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு மாறும் பட்சத்தில் வடக்கு நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே கேரளாவில் அடுத்த 5 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளள இந்திய வானிலை மையம், திருவனந்தபுரத்திற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“