மகன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கோவையில் அர்ஜுன் சம்பத் கைது

ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றார்.

author-image
WebDesk
New Update
A sam

ஈஷா யோகா மையம் குறித்தான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் வார இதழை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Advertisment

ஆர்ப்பாட்டம் தொடர்பாக கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜியை கோவை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்துள்ளனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

இந்நிலையில் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் கூறி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்கு  காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது.

Advertisment
Advertisements

WhatsApp Image 2024-11-17 at 13.21.30

இந்நிலையில் திடீரென கட்சி தொண்டர்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து செஞ்சிலுவை சங்கம் நோக்கி 20க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் பேரணியாக சென்றார். 

WhatsApp Image 2024-11-17 at 13.21.30 (1)

அவரை தடுத்து நிறுத்திய போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் பேரணியாக செல்வதற்கும் அனுமதி இல்லை என்று கூறியதை தொடர்ந்து திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டார்.

WhatsApp Image 2024-11-17 at 13.21.31

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில்  அர்ஜுன் சம்பத் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: