scorecardresearch

தமிழ் வழி பொறியியல் பாடப் பிரிவு நீக்கம் இல்லை: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

“தாய் மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் திராவிட மாடல் அரசு”- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

ponmudi

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவு நீக்கப்படாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி செய்தியர்களிடம் கூறியபோது, “தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் திராவிட மாடல் அரசு”, என்றார்.

மேலும், “அரசுக்கே தெரியாமல், அண்ணா பல்கலைக்கழகம் தன்னிச்சையாக இதற்கு மாறாக முடிவு எடுத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவு நீக்கப்படாது. தாய் மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் திராவிட மாடல் அரசு”, என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Importance of mother tongue anna university minister ponmudi