/indian-express-tamil/media/media_files/RrBw0fbCqn6QjXXlJFgA.jpeg)
’நான் தொடர்ந்து முக்கிய அரசியல் தலைவர்களால் குறிவைக்கப்பட்டு வருகிறேன் என்றும் தேசிய பத்திரிகையாளர் தினத்தை அரசு விழாவாக கொண்டாடி சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்பது எனது விருப்பம்’ என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகையாளர் தினத்தை அரசு விழாவாக கொண்டாடி சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்பது எனது விருப்பம். இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசுகிறேன்.
நேற்று, பழங்குடியினர் பெருமை தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் சர்ச்சை எழுந்தது. அதனை உடனடியாக கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுத்து இரண்டு துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஒருவரை அவமதித்து இருந்தாலும்கூட அது நியாயம் கிடையாது என்பது எனது நிலைப்பாடு.
நான் தெலுங்கானாவில் ஆறு பழங்குடியினர் கிராமங்களை தத்தெடுத்த பல உதவிகளை செய்து வருகிறேன். பொருளாதாரத்தில் அவர்களை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக அதிக புரதச்சத்து நிறைந்த ராஜேஸ்வரி கோழிப் பண்ணையில் இருந்து 20 கோழிகள் ஒரு குடும்பத்திற்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதைப் போல பள்ளி மாணவர்களுக்கு இருக்கை ஏற்படுத்துவதற்காக என் சொந்த முயற்சியில் பல லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. பள்ளி குழந்தைகள் கீழே அமரக்கூடாது என்பதால் ஆளுமைக்குட்பட்டு புதுச்சேரியில் இத்தகைய நிகழ்வு நடந்திருக்கவே கூடாது. அதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். இது குறித்து இணையதள பயன்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவர்கள் நாகரீகமாக எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய சம்பவம் குறித்து செய்தித் தொலைக்காட்சியில் பேசும் ஊடகவியலாளர்கள், அது குறித்து வருத்தம் தெரிவித்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் கூறியிருக்க வேண்டும். நாங்கள் மேடையின் மேல் அமர்ந்திருந்ததால் எங்களுக்கு பின்னால் அவர்கள் அமர்ந்திருந்ததை நாங்கள் பார்க்க முடியவில்லை. மக்களுக்கு தவறான தகவல்கள் சென்று விடக்கூடாது என்பதில் நான் குறிப்பாக இருக்கிறேன்.
அடிப்படையில் நாம் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும். உங்களது சகோதரியாக உங்களுக்கு என்னென்ன கோரிக்கைகள் இருக்கிறதோ அதனை உங்களது குடும்பத்தில் ஒருவராக இருந்து பார்த்துக்கொள்வேன். தெலுங்கானா ஊடகத்துறையாளர்கள்கூட மிகுந்த அன்பு கொண்டவர்கள். அவர்கள் என்னை அக்கா என்ற உறவு முறையில் எப்போதும் அழைப்பார்கள்.
பத்திரிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட விழாக்கள் என்று இல்லை; அரசியல் தலைவர்களையும், முக்கிய நிகழ்வுகளையும் முன்நிறுத்துவதற்கு நீங்கள் பல முயற்சிகள் எடுக்கிறீர்கள். இருந்தாலும் தொடர்ந்து வேலை செய்து கொண்டு வருவதற்கு உங்களை பாராட்ட வேண்டும்.
என்பது ஒரு அறிஞரின் கூற்று. எனது விருப்பம் என்னவென்றால் புதுச்சேரியின் அடிப்படை வளர்ச்சி எதுவாக இருந்தாலும் அதில் என் பங்கு இருக்க வேண்டும் என்பதுதான். அரசு பள்ளிகளை தொடர்ந்து பார்வையிடுவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டினை வாங்கி தருவது, அரசோடு இணைந்து முழு பட்ஜெட் எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டது, மக்களுக்கு அதிக நிதி உதவிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்வது போன்று முயற்சிகளை தொடரத்து புதுச்சேரி மக்கள் நலனுக்காக செய்து வருகிறேன்.
இருப்பினும் நான் தொடர்ந்து முக்கிய அரசியல் தலைவர்களால் குறிவைக்கப்பட்டு வருகிறேன். புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றபோது ஆறு அடுக்கு பாதுகாப்பு இருந்தது. ஆனால் எனக்கு இத்தகைய பாதுகாப்பு தேவை இல்லை என்று கூறினேன். இருப்பினும் ஒரு அடுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று காவல்துறை கேட்டுக்கொண்டது. இன்று நான் துணைநிலை ஆளுநர் மாளிகைக்குள் நுழையும்போது வாசலில் பள்ளி குழந்தைகள் இந்த மாளிகையை ஒட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அதை பார்க்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நான் மருத்துவக் கல்லூரி மாணவியாக இருக்கும்போது முதலமைச்சரை வந்து சந்தித்திருக்கிறேன். அதன்பின் ஆளுநர் அலுவலகத்திற்கு வந்த புகைப்படம் எடுத்து சென்று இருக்கிறேன். நான் தினந்தோறும் பத்திரிக்கை படிக்கும்போது என்னைப் பற்றிய நிகழ்ச்சிகள் செய்திகள் என்ன இருக்கிறது என்பதை பற்றி படிக்க மாட்டேன். முதலில் புதுச்சேரியில் எத்தகைய பிரச்சனைகள் இருக்கிறது என்பதை பார்த்து அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற மனநிலையில் தான் படிப்பேன்..
நம் நட்புறவு ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும். மேலும், இந்த நட்பு முறை நீடிக்க வேண்டும். அனைவரும் ஒன்றினைந்து ஆக்கபூர்வமான சமுதாயத்திற்கு நான் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். என் எண்ணத்திலும் ஊடகவியலாளர்களின் எண்ணத்திலும் சுயநலம் கிடையாது. தொடர்ந்து சமுதாயத்திற்கு உழைத்துக் வருவதுதான் ஒரே எண்ணம்.
சில நேரங்களில் பத்திரிக்கைகளில் சில தேவைகளுக்காக நான் பணியாற்றுவதாக விமர்சனம் வருகிறது. அதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. நான் துணைநிலை ஆளுநர் ஆவதற்கு முன்பு மருத்துவராக இருந்தேன். அப்போது நாள் முழுவதும் மக்கள் பணிக்காக உழைத்துக் கொண்டிருந்தேன்.
பாரதப் பிரதமர், குடியரசு தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் என்னை நம்பி இந்த பணியை கொடுத்திருக்கிறார்கள். அதில் எனது பணியும் மக்கள் பணியும் மிக முக்கியம். தெலுங்கானா ராஜ்பவன் ‘பிரஜா பவன்’(மக்கள் பவன்) என்ற பெயரை நான் சென்ற உடனே வாங்கி விட்டது. அதைப் போலவே எந்தப் பத்திரிக்கையில் எத்தகைய பிரச்சனைகளை பார்த்தாலும் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை முடிந்த அளவு விரைவாக செய்வேன்.
மசோதாக்களை நான் திருப்பி அனுப்பும்போது 175 சட்டப்பிரிவின்படி அதை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களுடன் தெளிவாக எழுதி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்வைக்க வேண்டும் என்றே எழுதி அனுப்பினேன். எல்லா நாளும் மக்களுக்கு பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.