நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி 10 இடங்களில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளியுள்ளது.
அந்தத் தொகுதிகள்
- சென்னை தெற்கு
- மத்திய சென்னை
- வேலூர்
- நீலகிரி
- கோவை
- தேனி
- ராமநாதபுரம்
- கன்னியாகுமரி
- புதுச்சேரி
- திருநெல்வேலி ஆகும்.
இதில் தேனி தொகுதியில் டி.டி.வி தினகரன் 25010 வாக்குகள் பெற்றுள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ் 3994 வாக்குகளும், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் 30162 வாக்குகளும், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் 16577 வாக்குகளும், புதுச்சேரியில் பா.ஜ.க. நமச்சிவாயம் 49909 வாக்குகளும், தென் சென்னையில் தமிழிசை 18585 வாக்குகளும், மத்திய சென்னையில் பா.ஜ.க. வேட்பாளர் 13509 வாக்குகளும், வேலூரில் ஏ.சி சண்முகம் 38197 வாக்குகளும், நீலகிரியில் எல். முருகன் 12977 வாக்குகளும், கோவையில் அண்ணாமலை 36617 வாக்குகளும் பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்துவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“