இன்னும் சில நாட்களில் திமுக எம்எல்ஏவும், இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேர் என்று மதுரையில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் வணிக வரிகள் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழா மதுரையில் நடைபெற்றது.
இந்த சிலையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அப்போது அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:
முந்தைய ஆட்சியில் இருந்து அதிமுக இந்தச் சிலையை திறக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டு வந்தனர்.
தோல்வியே காணாமல் தொடர்ந்து வெற்றியைப் பெற்ற மன்னர்தான் பெரும்பிடுகு முத்தரையர்.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறார். அதிமுக ஆட்சியில் அனுமதி கிடைக்காத நிலையில், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சிலையை திறக்க அனுமதி அளித்தார்.
இளைஞர்களையும், எங்களையும் வழிநடத்தி வரும் உதயநிதி அவர்கள், முத்தரையர் சிலையை திறந்து வைத்துள்ளார். நீங்கள் வாக்களித்து எங்களை தேர்வு செய்தாலும் அமைச்சர் பதவியை வகிக்க எங்களை தயார் படுத்தியது உதயநிதி அவர்கள் தான்.
அவர் இன்னும் சில தினங்களில் அமைச்சராக பொறுப்பேற்பார். அவர் எந்த பொறுப்பையும் சிறப்பாக வகிக்கக் கூடியவர் என்று மூர்த்தி தெரிவித்தார்.
குமரி அனந்தன் சுயசரிதை எழுத வேண்டும்: பிறந்தநாள் விழாவில் ப.சிதம்பரம் கோரிக்கை
விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மதுரை என்றாலே எப்போதும் மகிழ்ச்சி தான். இந்த சிலை திறப்பு விழாவை நன்றி தெரிவிக்கும் கூட்டமாகவும் எடுத்துக் கொள்ளலாம். சட்டசபை தேர்தலிலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்து முதல்வருக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறீர்கள். அதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me