mk-stalin | governor-rn-ravi | தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் மாண்புகளையோ மாநில உரிமைகளையோ மதிக்காத ஒன்றிய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது.
மதவாத – மொழி ஆதிக்க - மானுட விரோத அரசியல் ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை 2024-ஆம் ஆண்டில் மக்கள் எழுதப் போகிறார்கள்.
அதற்கான விழிப்புணர்வுப் பரப்புரைதான் இளைஞரணி மேற்கொண்டிருக்கும் இரு சக்கர வாகனப் பேரணி. கருப்பு-சிவப்பு இளைஞர் படை மக்களிடம் செல்லட்டும். ஜனநாயகப் போர்க்களத்தில் வெல்லட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தம்பி உதயநிதியையும் அவர் தலைமையிலான இளைஞரணியில் உள்ள ஒவ்வொருவரின் செயலாற்றலையும் தற்போது கண்டு மகிழ்கிறேன்.
1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள் மதுரை ஜான்சிராணி பூங்காவில் கழகத்தின் இளைஞரணியை கருணாநிதி தொடங்கிவைத்தார்.
கருப்பு சிவப்பு இளைஞர் படை மக்களிடத்தில் செல்லட்டும். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதால் நீட் தேர்வு போன்ற கொடூரங்கள் எத்தனை உயிர்களை பறித்துள்ளன என எடுத்துச் சொல்லட்டும்.
நீட் விலக்கிற்கான அரை கோடி கையெழுத்துக்களை பெறட்டும். ஜனநாயக போர்க்களத்தில் வெல்லட்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதில், மேலும், “நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கிறது” என்ற விமர்சனம் பேசுபொருளாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“