சென்னையில் பெட்ரோல், டீசல் எரிபொருள்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் இன்று (திங்கள்கிழமை) காலை முதல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சென்னையில் வாகனங்களுக்கு தேவையான டீசல் கிடைக்கவில்லை. குறிப்பாக சென்னை எழும்பூரில் நேற்று மாலை முதலே டீசல் இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இதேபோல் மற்ற இடங்களில் டீசல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அண்மையில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பை 70 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், 70 சதவீத கச்சா எண்ணெய் மட்டுமே சுத்திகரிக்கப்பட்டதால் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், மற்ற எண்ணெய் நிறுவனங்களிலும் டீசலுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை என்பதால் வாகன ஓட்டிகள் அதிகாலை முதலே டீசல் போட பங்க்கில் குவிந்தனர். எனினும் டீசல் இல்லாத காரணத்தால் அவர்கள் அவதிக்குள்ளாகினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil