ஆவின் நிறுவனம் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதன் நிலையங்களில் போதுமான அளவு பால் பவுடர் மற்றும் பால் இருப்பு வைத்துள்ளது. கனமழையிலும் சென்னையில் இந்த 8 ஆவின் விற்பனை நிலையங்கள் 24x7 திறந்திருக்கும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கனமழையை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில், சென்னையில் தடையின்றி பால் விநியோகத்தை உறுதி செய்வதற்காக ஆவின் நிர்வாகம் செனனியில் உள்ள தனது பல பால் விற்பனை நிலையங்களை 24 மணி நேரமும் இயக்குவதாக அறிவித்துள்ளது.
சென்னையில் 24 மணிநேரமும் திறந்திருக்கும் ஆவின் பால் விற்பனை நிலையங்கள் வருமாறு:
1.அம்பத்தூர்
2.அண்ணா நகர்
3.மாதவரம்
4.வண்ணாந்துறை (அடையாறு) மற்றும் பெசண்ட் நகர்
5. வசந்தம் காலனி, அண்ணாநகர் கிழக்கு
6.சோழிங்கநல்லூர்
7.விருகம்பாக்கம் (வளசரவாக்கம் மெகா மார்ட் அருகில்)
8.சி.பி. ராமசாமி நிலையம், மயிலாப்பூர்
ஆவின் பால் விற்பனை நிலையத்தில் ஒரு நபர் 4 பால் பாக்கெட்டுகள் மட்டுமே வாங்க முடியும். மேலும், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய ஆவின் விற்பனை நிலையங்களில் போதுமான அளவு பால் பவுடர் மற்றும் பால் இருப்பு வைத்துள்ளதை உறுதி செய்துள்ளது.
மேலும், மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலும் பால் விநியோகத்தில் சீரான தன்மையை பராமரிக்க பால் பவுடர் மற்றும் பால் விநியோகிக்க சென்னையில் தற்காலிக விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். பொதுமக்களுக்கு பால் தடையின்றி விநியோகம் செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆவின் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“