/tamil-ie/media/media_files/uploads/2019/09/Bawaria.jpg)
காபி பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து ரூ.1.50 லட்சம் திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
coimbatore | கோவை கணபதி வரதராஜூலு நகரை சேர்ந்தவர் கண்ணப்பன். தனியார் நிறுவன மேலாளர் பணியாற்றி வருகிறார்.
இவரது வீட்டில் திருச்சியை சேர்ந்த சரண்யா (37) என்ற பெண் வீட்டு வேலை பார்த்து வந்தார்.
இவர, கடந்த 22-ஆம் தேதி கண்ணப்பன் மற்றும் அவரது தாயாருக்கு காபி கொடுத்துள்ளார். அதில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் அதனை குடித்த சிறிது நேரத்தில் இருவரும் தூக்க நிலைக்கு சென்றுள்ளனர்.
பின்னர் தூக்கம் தெளிந்து எழுந்து பார்த்த போது, சரண்யாவை காணவில்லை, வீட்டிலும் படுக்கையறையில் உடைமைகள் சிதறி கிடந்துள்ளன.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பீரோவை பார்க்கும் போது வைத்திருந்த 1.15 லட்சம் ரூபாய் பணம், 3.5 பவுன் நகை, 2 செல்போன்களும் களவாட பட்டது தெரியவந்தது.
இது குறித்து கண்ணப்பன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான சரண்யாவை தேடி வருகின்றனர்.
வீட்டு வேலை செய்யும் பெண் காபியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.