உதயநிதி பிறந்தநாளில் இன்னொரு வாரிசு… கலைஞர் குடும்ப உற்சாகம்!

உதயநிதி பிறந்தநாளில் கலைஞர் குடும்பத்தில் இன்னொரு வாரிசு பிறந்திருப்பதால் கலைஞர் குடும்பத்தினரும் அருள்நிதி ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

In Kalaignar family born new baby girl, arulnithi blessed new baby girl, at Udhayanidhi Birthday born new baby girl, arulnithi, arulnithi keerthana, உதயநிதி பிறந்தநாளில் இன்னொரு வாரிசு, கலைஞர் குடும்ப உற்சாகம் , அருள்நிதிக்கு பெண் குழந்தை, Udhayanidhi, Kalaignar family, karunanidhi, arulnithi tamilarasu

கலைஞர் குடும்பத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி பிறந்தநாளில், இன்னொரு வாரிசு பிறந்திருக்கிறது. இதனால், கலைஞர் குடும்பத்தினர் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

திமுக இளைஞரணியினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை நேற்று முன்தினம் (நவம்பர் 28) பல இடங்களில் பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கி கொண்டாடினார்கள். ஸ்டாலினுக்கு பிறகு திமுகவில் உதயநிதி என்கிற விதமாகவே திமுகவினர் முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.

உதயநிதியின் பிறந்தநாளில், அவருடைய தம்பியும் நடிகருமான அருள்நிதிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தியால் கலைஞர் குடும்பத்தினரை உற்சாகத்தில் உள்ளனர்.

அருள்நிதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவின் மகன் ஆவார். இவர் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான வம்சம் திரைப்படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இந்த படத்தைத் தொடர்ந்து, உதயன், மௌனகுரு, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இதனிடையே, நடிகர் அருள்நிதி 2015ம் ஆண்டு கீர்த்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகிழ் என்ற ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், அருள்நிதி – கீர்த்தனாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்களும் திமுகவினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அருள்நிதி பெண் குழந்தை பிறந்துள்ளதை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “எங்களுடைய குட்டி தேவதை.. எங்களுடைய புதிய அன்பை நாங்கள் வரவேற்கிறோம்… நவம்பர் 27ம் தேதி பிறந்திருக்கிறாள்..” என்று குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நவம்பர் 27ம் தேதி உதயநிதி பிறந்தநாளில் அருள் நிதி அவருக்கு ஹாப்பி பர்த்டே உதயநிதி அண்ணா என்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதே நாளில் அருள்நிதி – கீர்த்தனா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. உதயநிதி பிறந்தநாளில் கலைஞர் குடும்பத்தில் இன்னொரு வாரிசு பிறந்திருப்பதால் கலைஞர் குடும்பத்தினரும் அருள்நிதி ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: In kalaignar family born new baby girl

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com