நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்கு தொல்லை என்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கருத்தை காலம் போக்கியது. 1971ஆம் ஆண்டில் இந்திரா, கருணாநிதி இடையே கூட்டணி ஏற்பட்டது.
அதன்பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. திமுக, காங்கிரஸ் அன்று தொடங்கி இன்று வரை வெட்டியும், ஒட்டியும் தொடருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கும் சூழலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது.
இந்நிலையில், திமுக தலைமை குமரி கிழக்கு மாவட்டத்திற்கு இதுவரை 12 பதவிகளை அளித்துள்ளது. கனிமொழியின் நெருங்கிய நட்பு வட்டத்திலுள்ள முன்னாள் நாகர்கோவில் மக்களவை உறுப்பினர் ஹெலன் டேவிட்சனுக்கு மகளிர் பிரிவிற்கான தலைமை பதவி கிடைத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் தணிக்கை குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, ,மிசா சிறை கைதி குளச்சல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.பெர்னாட், மாநில மீனவர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது, குமரி மாவட்ட மீனவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
பசலியான் நாசரேத் துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில மீனவர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் என மூவருமே குமரி முட்டம் பகுதியை சேர்ந்தவர்.
இதற்கிடையில், திமுகவில் ஏற்கனவே இருக்கும் பதவிகள் போதாது என்பது போன்று புதிதாக விளையாட்டு அணி, அயல்நாட்டு அணி என இரு அமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. குமரியில் ஹெலன் டேவிட்சன், சுரேஷ் ராஜன்,இரா.பெர்னாட்,ஆஸ்டின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெஜினால்ட்(சட்டத்திருத்த குழு உறுப்பினர்)தாமரை பாரதி(விவசாய அணி மாநில துணை தலைவர்)சிவராஜ்(அமைப்பு சார ஓட்டுநர் அணி) தில்லை செல்வம்( கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை) ஜோசப் ராஜ் (சிறுபான்மை அணி துணை தலைவர்) லிவிங்ஸ்டன் (வழக்கறிஞர் அணி துணை செயலாளர்)என ஒரு டஜன் புதிய பொறுப்பாளர் பட்டியலை.தி மு க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், பதவி கிடைத்தவர்கள் மத்தியில் எழும் கேள்வி அடுத்த மாதம் குமரிக்கு முதல்வர் வர இருக்கும் நிலையில் இத்தனை புதிய பதவியாளர்கள் வெளியிடும் சுவர் ஓட்டிகளை எங்கே, எந்த சுவர்களில் ஒட்டுவார்கள்? விழா மேடையில் மாவட்ட அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ், சிறப்பு விருந்தினர்களுடன் மேடையில் அமர்வது யார்.? யார்.? என்ற இடியாப்ப சிக்கலில் குமரி மாவட்ட திமுக கட்சியினர் நிலை உள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் பதவியே கிடைக்காதவர்கள் நிலை பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளன.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil