Advertisment

மெரினாவில் ஜெ. நினைவிடம் தேவையில்லை : ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து

மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைப்பதில் தனிப்பட்ட முறையில் தனக்கு உடன்பாடு இல்லை என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai high court

மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைப்பதில் தனிப்பட்ட முறையில் தனக்கு உடன்பாடு இல்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இந்நிலையில், இதற்கு தடை விதிக்க கோரி டிராபிக் ராமசாமி மற்றும் வழக்குரைஞர் துரைசாமி ஆகியோர் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் இன்று தலைமை நீதிபதி இத்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா நினைவிடம் கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு எதிராக கட்டப்பட்டு வருவதாகவும், நினைவிடம் கட்ட மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டியது கட்டாயம் என மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டனர்.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், ’’1987 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 ஆயிரத்து 600 சதுர அடியில் எம்.ஜி.ஆர் சமாதி கட்ட கடலோர பாதுகாப்பு மண்டலத்திடம் அரசு அனுமதி பெற்றிருப்பதாகவும், அந்த இடத்தில் தான் தற்போது ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளதாகவும்’’ தெரிவித்தார்.

இதனையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்பதனால் அவருக்கு மெரினாவில் நினைவிடம் கட்ட கூடாது என்றால் அதில் இந்த நீதிமன்றம் தலையிடாது. ஆனால், கடற்கரை பாதுகாப்பு மண்டலத்தின் விதிகளுக்கு புறம்பாக ஜெயலலிதா நினைவிடம் கட்டப்பட்டால், அதில் நீதிமன்றம் தலையிட்டு தக்க உத்தரவை பிறப்பிக்கும்.

உலகத்திலே இரண்டாவது பெரிய கடற்கரை மெரினா. இது இந்திய நாட்டின் ஆழகாகும். ஆனால் காமராஜர் சாலை வழியாக செல்லும் போது மெரினா கடற்கரையின் அழகை பார்க்க முடியாதவாறு கட்டுமானங்கள் உள்ளன.

தார்மீக ரீதியாக தனக்கு ஒரு விஷயம் தவறாக இருந்தாலும், சட்ட ரீதியில் அது தவறு என கூற முடியாது. மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட எனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சட்ட ரீதியாக இந்த உத்தரவை பிறப்பிக்க மனுதாரர்கள் முறையான ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு வழக்கை ஜூன் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவிடம் திட்ட வரைபடத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment