தமிழக- கேரள எல்லையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் அவரது காதலி கைதுசெய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையை அருகில் உள்ள பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரது பெற்றோர் ஷாரோன் ராஜை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஷாரோன் ராஜ் உயிரிழந்தார்.
இந்த நிலையில் ஷாரோன் ராஜின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரின் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ஷாரோனா் ராஜிம், கிரீஷ்மா என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இந்த காதல் விவகாரத்துக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. இதைக் கேள்விப்பட்ட ஷாரோன் ராஜ், கிரீஷ்மாவிடம் கேட்டுள்ளார். அப்போது கிரீஷ்மா அவருக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார்.
அந்தக் குளிர்பானத்தில் மெல்லக் கொல்லும் விஷம் இருந்துள்ளது. இதையறியாத ஷாரோன் ராஜ், குளிர்பானம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது அவரது உடலின் பாகங்கள் ஒவ்வொன்றாக செயல் இழந்துள்ளன. இந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து போலீசார் கிரீஷ்மாவை கைது செய்தனர்.
அப்போது காவல் நிலையில் அவர் பினாயில் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஷாரோன் ராஜை கொலை செய்வதற்கு முன்பு, மெல்ல கொல்லும் விஷத்தின் வகைகள் மற்றும் போலீசில் மாட்டிக் கொண்டால் தப்பிப்பது எப்படி என்பது என கூகுளில் தேடியுள்ளார்.
மேலும் வழக்கில் ஆஜராவதற்கு முன்பு சட்ட ஆலோசனையும் பெற்றுள்ளார். காதலனுக்கு காதலி விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது காதலியின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil