/indian-express-tamil/media/media_files/gxXuL2z6tNFBEbz9ZUnE.jpg)
தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
17வது மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.72 சதவீதம் நடைபெற்றுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமக தெரிவித்துள்ளது.
முதலில் 72 சதவீத வாக்குப்பதிவு எனக் கூறப்பட்ட நிலையில், அடுத்து 69.46 எனக் கூறப்பட்டது. தொடர்ந்து 69.72 என அதிகாரப்பூர்வ வாக்கு சதவீதம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் அதிகப்பட்சமாக தர்மபுரியில் 81.20 சதவீத வாக்குகளும், மத்திய சென்னையில் குறைந்தப்பட்சமாக 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
வாக்குப்பதிவு
தொகுதி | சதவீதம் (%) |
திருவள்ளூர் | 68.59 |
வடசென்னை | 60.11 |
தென்சென்னை | 54.17 |
மத்திய சென்னை | 53.96 |
ஸ்ரீபெரும்புதூர் | 60.25 |
காஞ்சிபுரம் | 71.68 |
அரக்கோணம் | 74.19 |
வேலூர் | 73.53 |
கிருஷ்ணகிரி | 71.50 |
தர்மபுரி | 81.20 |
திருவண்ணாமலை | 73.24 |
ஆரணி | 75.76 |
விழுப்புரம் | 76.52 |
கள்ளக்குறிச்சி | 79.21 |
சேலம் | 78.16 |
நாமக்கல் | 78.21 |
ஈரோடு | 70.59 |
திருப்பூர் | 70.62 |
நீலகிரி | 70.95 |
கோவை | 64.89 |
பொள்ளாச்சி | 70.41 |
திண்டுக்கல் | 71.14 |
கரூர் | 78.70 |
திருச்சி | 67.51 |
பெரம்பலூர் | 77.43 |
கடலூர் | 72.57 |
சிதம்பரம் | 76.37 |
மயிலாடுதுறை | 70.09 |
நாகப்பட்டினம் | 71.94 |
தஞ்சாவூர் | 68.27 |
சிவகங்கை | 64.26 |
மதுரை | 62.04 |
தேனி | 69.84 |
விருதுநகர் | 70.22 |
ராமநாதபுரம் | 68.19 |
துாத்துக்குடி | 66.88 |
தென்காசி | 67.65 |
திருநெல்வேலி - | 64.10 |
கன்னியாகுமரி | 65.44 |
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.