சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில், ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் ஆணையம் கலாஷேத்ராவில் விசாரணை நடத்தியது. கலாஷேத்ரா பாலியல் புகாரில், ஒரு ஆசியர் கைது செய்யப்படுள்ள நிலையில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் கலாஷேத்ராவில் விசாரணை நடத்தினார்.
பாலியல் புகாரில் மேலும் மூன்று பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ். குமாரி நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து, முன்னாள் மாணவி ஒருவரின் புகாரின் பேரில் ஆசிரியர்களில் ஒருவரான உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, இசைக்குழு கலைஞர்களான ஸ்ரீநாத், சஞ்சித் லால் மற்றும் சாய் கிருஷ்ணன் ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.
இந்த விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்பு தீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய நிலையில் அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.
இதற்கிடையில் சில மாணவிகள் தாங்கள் பாதிக்கப்படவில்லை எனவும் கூறினார்கள். மேலும் இந்த வழக்கில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று (பிப்.22,2024) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா கொடும் பழிக்கு ஆளாகியுள்ளது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், “நீதிபதி கண்ணன் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க வேண்டும்” எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“