Advertisment

திமுக தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்

திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையத்தின் செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜாரானார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai high court, election commission of india, greater chennai corporation, tamilnadu government, rk nagar by-election

chennai high court

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதவில்லை என தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையத்தின் செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜார்.

Advertisment

தமிழகத்தில் கடந்தாண்டு (2016) அக்டோபர் மாதம் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என கூறி திமுக எம்.பி ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, கடந்த பிப்ரவரி மாதம் (2017) பிறப்பித்த உத்தரவில், மே மாதம் 14 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்த மனுவில் ஜூலை மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கபடும் என தெரிவிக்கபட்டது.

இந்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை என்று திமுக தரப்பில் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. அதில் குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கி முதல் அமர்வு கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், செப்டம்பர் 18 ம் தேதி தேர்தல் நடத்துவது தொடர்பான மாநில தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட வேண்டும், நவம்பர் 17 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவையும் பின்பற்றவில்லை என தெரிவித்து மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு ஆகியவற்றிற்கு எதிராக திமுக மாநிலங்களவை எம்.பி ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அதில் கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் உள்ள மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ் கான், T. S. ராஜசேகர், மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர், தலைமை செயலாளர் கிரிஜா வைதியநாதன், ஊரக வளர்ச்சி, பஞ்சயத்துராஜ் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர். ஹரிமண்டர் சிங், சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம் (Poovalingam), பேரூராட்சிகள் இயக்குனர் பழனிச்சாமி IAS, பெரு நகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் I.A.S., ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அவர்களை தண்டிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபநி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் அக்டோபர் 9 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையர், மற்றும் மாநில ஆணையத்தின் செயலாளர் ஆகிய இருவரும் அடுத்த விசாரணையின் போது உரிய பதில் மனுவுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது.

இன்று தலைமை நீதிபதி வேறு அலுவல் பணி காரணமாக முதல் அமர்வில் பட்டியலிட வழக்குகளை நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வுக்கு வழக்கு விசாரணை மாற்றினர்.

இதனை அடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் தலைமையிலான அமர்வில் வந்தது. அப்போது நீதிபதிகள் அனைத்து வழக்குகளையும் தள்ளிவைப்பதாக தெரிவித்தனர்.

அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமையாஜி, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் ஆணையர், மற்றும் செயலாளர் இருவரும் ஆஜராகி உள்ளனர் என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் இந்த வழக்கில் இருவரும் இன்று நேரில் ஆஜரானதாக பதிவு செய்து கொள்வதாகவும், வழக்கை வரும் வெள்ளிக்கிழமை தள்ளிவைப்பதாகவும் அன்று இருவரும் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு விசாரணை வெள்ளிக்கிழமை தள்ளிவைத்தனர்.

Chennai High Court Dmk Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment