Advertisment

'ஐயா, எனக்கும் உதவி பண்ணுங்க ஐயா': அமைச்சர் துரைமுருகன் அட்மின் குசும்பு?

தி.மு.க பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து யூடியூபர் ஹர்ஷா சாய் இடம் 'ஐயா, எனக்கும் உதவி பண்ணுங்க ஐயா' என்று உதவிக் கேட்டு பதிவு செய்யப்பட்டுள்ள கருத்து சமூக வலைதளங்களில் வைரலானது.

author-image
WebDesk
New Update
Duraimurugan

இந்த கருத்து பதிவிட்டது துரைமுருகனின் சமூக வலைதளப் பக்கத்தின் அட்மின் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு, அட்மின் குசும்பு என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தி.மு.க பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து யூடியூபர் ஹர்ஷா சாய் இடம் 'ஐயா, எனக்கும் உதவி பண்ணுங்க ஐயா' என்று உதவிக் கேட்டு பதிவு செய்யப்பட்டுள்ள கருத்து சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, இந்த கருத்து பதிவிட்டது துரைமுருகனின் சமூக வலைதளப் பக்கத்தின் அட்மின் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு, அட்மின் குசும்பு என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisment

ஆந்திரப் பிரதேசம், விஜயநகரத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷா சாய். இவர் கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு யூடியூப் சேனலைத் தொடங்கி உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார். இவரது வீடியோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் பிரபலமானார். 

5 ரூபாய் நாணங்களாக 4 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்து கார் வாங்குவது, பேய் வீட்டில் தங்குவது சுவாரசியமான வீடியோக்களை வெளியிட்டு பார்வையாளர்களை ஈர்த்தார். இதனால், ஹர்ஷா சாய் வீடியோக்களுக்கு அதிக அளவில் பார்வையாளர்களும் சப்ஸ்கிரைபர்களும் கிடைத்தனர். யூடியூபில் இருந்து வருமானமும் கொட்டியது. 

ஹர்ஷா சாய் யூடியூப் மூலம் பணம் சம்பாதித்தது மட்டுமல்லாமல், ஏழை மக்களுக்கும் உதவி செய்தார். ஏழைச் சிறுவனுக்கு மிதிவண்டி வாங்கிக் கொடுப்பது, வீடு கட்டி கொடுப்பது ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதை எல்லாவற்றையும்விட, 1 லட்சம் ஏழை மக்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் உணவு வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினார்.

ஹர்ஷா சாய் தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் யூடியூப் சேனல்களை நடத்தி லட்சக் கணக்கான சப்ஸ்கிரைபர்களைப் பெற்று மும்மொழிகளிலும் முத்திரை பதித்து வருகிறார். 

ஹர்ஷா சாய், காதும் கங்கன்னாடோரா என்ற ஏழை விவசாயிக்கு ஹர்ஷா சாய் ஒரு ஏக்கர் விளைநிலம் வாங்கி இலவசமாக கொடுத்த வீடியோவை 3 மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். ஹர்ஷா 

ஹர்ஷா சாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயியின் குடும்பத்தினர் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்த வீடியோ யூடியூப் ஃபன்ஸ் பேஜ் என்ற பக்கத்தில் பகிரப்பட்டது. 

இந்நிலையில், இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்க ஐடியில் இருந்து  ‘ஐயா எனக்கும் உதவி பண்ணுங்க ஐயா' என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தில் அமைச்சர் துரைமுருகனின் புகைப்படம் உள்ளது. 

யூடியூபர் ஹர்ஷா சாய் வீடியோவில், ‘ஐயா எனக்கும் உதவி பண்ணுங்க ஐயா’ என்று அமைச்சர் துரைமுருகன் உதவி கேட்டு பதிவிட்டது குறித்து, நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாக கமெண்ட் செய்தனர். இதனால், துரைமுருகன் ஐடியில் இருந்து உதவி கேட்டு பதிவிட்ட கமெண்ட் வைரலானதைத் தொடர்ந்து, துரைமுருகன் தரப்பினர் இந்தப் பதிவை இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் கவனித்து நீக்கியுள்ளனர்.

மேலும், துரைமுருகனின் சமூக வலைதளப் பக்கங்களைக் நிர்வகிக்கும் நபர்தான், ‘ஐயா எனக்கும் உதவி பண்ணுங்க ஐயா’ என்று துரைமுருகனின் ஐடி-யில் இருந்து கமெண்ட் செய்ததும் தெரியவந்துள்ளது.  இதற்கு, அட்மின் குசும்பு என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Duraimurugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment