tirunelveli | tuticorin | தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (22.12.2023) விடுமுறை. வெள்ளநீர் வடியாத காரணத்தினால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கன மழை முதல் அதிகன மழை பெய்தது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் ஜங்ஷன், டவுண், சிந்துபூந்துரை, களக்காடு, கூடங்குளம், செட்டிக்குளம் மற்றும் தாமிரபரணி கரையோரம் இருந்த கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக் காடாய் காட்சியளித்தன. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சென்னைக்கு சென்ற ரயில் 800 பயணிகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் தூத்துக்குடி பகுதிகளில் மழைப் பொழிவு காணப்பட்டது.
தொடர்ந்து, தூத்துக்குடியில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிச.22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை, வெள்ளம் காரணமாக இன்று (22.12.2023) கீழ்க்கண்ட பள்ளிகளை தவிர்த்து 9-ம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் செயல்படும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கீழ்க்கண்ட 9 பள்ளிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதாலும், மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும் கீழ்க்கண்ட பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை (22.12.2023) விடுமுறை அளிக்கப்படுகிறது.
1. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, மீனாட்சிபுரம்
2. மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, கல்லணை
3. அரசு மேல்நிலைப்பள்ளி – வடக்கு செழியநல்லூர்
4. ம.தி.தா. மேல்நிலைப்பள்ளி – திருநெல்வேலி
5. சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளி – பாளையங்கோட்டை
6. அரசு மேல்நிலைப்பள்ளி – தருவை
7. அரசு உயர்நிலைப்பள்ளி – சீவலப்பேரி
8. ஜவஹர் அரசு உயர்நிலைப்பள்ளி – திருநெல்வேலி
9. அரசு ஆதிதிராவிடர் உண்டு உறைவிட பள்ளி – மேலணை, பாபநாசம்
கீழ்க்கண்ட இரண்டு பள்ளிகளில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு முகாம் உள்ளதால் கீழ்க்கண்ட இரண்டு பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை (22.12.2023) விடுமுறை அளிக்கப்படுகிறது.
1. மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மீனாட்சிபுரம்
2. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, சேரன்மகாதேவி” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“