மணல் கொள்ளையால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழப்பு; தேவேந்திர குல வேளாளர்கள் முற்றுகை போராட்டம்

மணல் கொள்ளையால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழக்கின்றனர்; திருச்சி, தஞ்சை, கரூர் மாவட்ட காவிரி ஆற்றில் இயங்கும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர் அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மணல் கொள்ளையால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழக்கின்றனர்; திருச்சி, தஞ்சை, கரூர் மாவட்ட காவிரி ஆற்றில் இயங்கும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர் அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
In Trichy Devendra Kula Velalar organized a siege protest

திருச்சியில் தேவேந்திர குல வேளாளர் அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தேவேந்திர குல வேளாளர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திருச்சி, தஞ்சை, கரூர் மாவட்ட காவிரி ஆற்றில் இயங்கும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Advertisment

மேலும், மணல் குவாரிகளில் இருந்து வரும் லாரிகளால் மக்களுக்கு பேராபத்து ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினர்.
தொடர்ந்து, மணல் குவாரிகளில் அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீரும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதை தடுக்க மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வக்கீல் சங்கர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: