Advertisment

40 சதவீத பேருந்துகள் இயக்கம்: திருச்சியில் திண்டாடிய பயணிகள்!

பொதுவாக, தமிழ்நாட்டின் மையப் பகுதியில் இருக்கக்கூடிய திருச்சி மாவட்டத்திலிருந்து 1500க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

author-image
WebDesk
New Update
buses run in Trichy

திருச்சி மண்டலத்தில் 40% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதத் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று (09.01.2024) முதல் காலவரையற்ற  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அமைச்சர், அரசு அதிகாரிகளுடன் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

Advertisment

பொதுவாக, தமிழ்நாட்டின் மையப் பகுதியில் இருக்கக்கூடிய திருச்சி மாவட்டத்திலிருந்து 1500க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இன்று அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் மாநகர் புறநகர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு 40 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

மாநகரில் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இடையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

மத்திய பேருந்து நிலையம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட தயாராக இருந்த அரசு பேருந்து ஓட்டுனரை அண்ணா தொழிற்சங்க புறநகர் மாவட்ட செயலாளர் பாஸ்கர் கடுமையாக ஆபாச வார்த்தைகளில் திட்டி பேருந்து எடுக்கக் கூடாது பணிமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

பொதுமக்களே ஆதரவு கொடுக்கும் பொழுது நீ ஏன் பேருந்து ஓட்டுகிறாய் என தொடர்ந்து கடுமையாக திட்டினார். சிறிது நேரத்தில் குறைந்த பயணிகளுடன் அந்த பேருந்து புறப்பட்டு சென்றது.

மாலை நேர நிலவரப்படி 40 சதவீத பேருந்துகளே இயங்கின. மணப்பாறை, துவரங்குறிச்சி, விராலிமலை, துவாக்குடி, துறையூர் டெப்போக்களில் குறைந்த அளவு பேருந்துகள் வெளியே சென்றதால் பள்ளி கல்லூரிக்குச் சென்ற மாணவர்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.

காலை முதல் சாரல் மழை தூவி கொண்டே இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியற்றனர். பல்வேறு டெப்போக்களில் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் திருச்சி மண்டல போக்குவரத்துக்கழக அலுவலகம் முன்பு காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment