திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்திலே கன்னியாகுமரி மாவட்டத்தில் நூலகங்கள் இருந்துள்ளன. அன்றைய மக்களின் பொது அறிவுக்கு நாகர்கோவில் ஒரு பொது நூலகம் இருந்துள்ளது.
அதேநேரத்தில், கன்னியாகுமரிக்கு மிக அருகில் அஞ்சுகிராமம், வாரியூர் பகுதியில் 1952ஆம் ஆண்டில், பிள்ளைமார் சமுகத்தை சேர்ந்தவர்கள் முயற்சியில். கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் பெயரில் ஒரு ஓலை குடிசையில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டது.
கால ஓட்டத்தின் மத்தியில் ஓலை குடிசை ஓட்டு கட்டடமாக மாறியபோது, அதன் அருகில் ஒரு தபால் நிலையமும் இணைந்தது.
அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் அவரது சட்டமன்ற நிதியில் இருந்து ரூ.15 லட்சத்தில் ஓட்டுக் கட்டடம், வலுவான கான்கிரீட் கட்டிடமாக மாறியது.
இந்தக் கட்டடம் காணும் பொங்கல் தினத்தில் வாரியூரில் ஊர் மக்கள் ஒன்று கூடிய நிகழ்வில் திறக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் முன்னிலையில், நூலகத்தை 70 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய குடும்பத்தின், இன்றைய வாரிசும், வாரியூர் வெளிநின்ற விநாயகர் டிரஸ்ட் தலைவருமான வாரியூர் நடராஜன் திறந்துவைத்தார்.
அப்போது, எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், பசலியான் நசரேயன் மற்றும் ஊர்மக்கள் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ, துணைத் தலைவர் காந்தி ராஜ், தபால் துறை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் நூலகத்திற்கு ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கிய தளவாய் சுந்தரத்துக்கு வாரியூர் பகுதி மக்கள் சார்பில் தபால் துறையில் வாழும் மனிதரின் செயலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ.600 கட்டணம் செலுத்தி "மைஸ்டாம்ப், செலுத்தினால் பயன் பாட்டில் இருக்கும் ஸ்டாம்புடன் சிறப்பு "மை ஸ்டாம்ப்" தளவாய் சுந்தரத்தின் நிழல் படத்துடன் வெளியிடப்பட்டது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“