திருவாரூர் அருகே காட்டூரில், ரூ.12 கோடியில் 7,000 சதுரஅடி பரப்பில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
இந்த திறப்பு விழாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கும் நிலையில், பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரும், முத்துவேலர் நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்க பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் சிறப்பு விமானம் மூலம் திருச்சி வருகைத் தருகிறார் என்றும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் சென்று, கார் மூலம் காட்டூருக்கு சென்று விழாவில் பங்கேற்கிறார் என்றும் தெரிவித்திருந்தனர்.
ஆனால் தற்போது பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. உடல்நிலை காரணமாக நிதிஷ்குமார் திருவாரூர் பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில், டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, டிஆர்பி ராஜா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், பூண்டி கலைவாணன் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil