புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ள ராஜீவ் காந்தி சிறுவர் பூங்கா திறப்பு விழா இன்று நடைபெற்றது.
உழவர்கரை நகராட்சி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், “அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு பெற இந்த ஆண்டே கிடைப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.
நிர்வாக ரீதியாக உள்ள சில சிக்கல்களை சரி செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.
மேலும்,ஆளுநராக தமிழ் மக்களுக்கு சேவை செய்ய தினம் தினம் இறைவனுக்கு நன்றி சொல்லி பணி செய்கிறேன் என்றும், ஆளுநராக இருக்கும் போது தேர்தலில் எப்படி போட்டியிட முடியும் என்றும் ,தேர்தலில் போட்டியிடுவது குறித்து பிற்காலத்தில் பார்க்க வேண்டியது எனவும்,எந்த உள்நோக்கமும் இன்றி புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்து வருகின்றேன் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“