எம்எல்ஏ விடுதியில் மோதல்: ஆதி ராஜாராம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு

Former AIADMK minister S P Velumani news in tamil: முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அரிகாரிகளை பணி செய்ய இடையூறு விளைவித்ததற்காக அதிமுக நிர்வாகி ஆதி ராஜாராம் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Including AIADMK leader Aadhi Rajaram and 10 others have booked for causing disturbance to  DVAC sleuths

Sp Velumani Tamil News : முன்னாள் அமைச்சகர் எஸ்.பி வேலுமணி விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அரிகாரிகளை பணி செய்ய இடையூறு விளைவித்ததற்காக அதிமுக நிர்வாகி ஆதி ராஜாராம் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி அவரது பதவியை தவறாக பயன்படுத்தி ஒப்பந்தங்களை தனது சகோதரர் மற்றும் ஆதரவாளர்களுக்கு வழங்கியதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சரை விசாரணை மேற்கொண்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறை, அவருக்கு நெருக்கமானவர்களுக்குத் தொடர்புடைய 60 இடங்களில் அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர்.

மேலும் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீட்டிலிருந்து கட்டுக்கட்டுக்காக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பெட்டகச் சாவியையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. தவிர, அவரின் வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், டெண்டர் மோசடி வழக்கு விவகாரத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சர் தொடர்பான சொத்துகளை சோதனையை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், திருவல்லிக்கேணியில் உள்ள எம்எல்ஏ ஹாஸ்டலில் எஸ்.பி வேலுமணி உள்ளார் என்ற தகவல் அறிந்தனர். எனவே, சோதனையில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகளுள் சிலர் அவரை விசாரிக்க எம்எல்ஏ ஹாஸ்டல் நோக்கி விரைந்தனர். இந்த செய்தி அறிந்த அதிமுக நிர்வாகி ஆதி ராஜாராம் மற்றும் சில நிர்வாகிகள் ஹாஸ்டல் நுழைவாயிலில் கூடி போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும் ஹாஸ்டல் வளாகத்திற்குள் உள்ளே நுழைவும் முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்தபோது தொடர் கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சகர் எஸ்.பி வேலுமணியை விசாரிப்பதற்காக எம்எல்ஏ ஹாஸ்டல் வளாகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை அரிகாரிகளை பணி செய்ய இடையூறு விளைவித்த அதிமுக நிர்வாகி ஆதி ராஜாராம் உட்பட 10 பேர் மீது இந்திய தண்டைனைச் சட்டம் (தொற்றுநோய் சட்டத்தின் பிரிவுகள் 143 (சட்டவிரோத சட்டசபை), 188 (பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவை மீறுதல்), 269 (தொற்றுநோயை பரப்புவதற்கு கவனக்குறைவான செயல்)) ஆகிய பிரிவின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Including aiadmk leader aadhi rajaram and 10 others have booked for causing disturbance to dvac sleuths

Next Story
‘பாரதி பாஸ்கர் நல்லா இருப்பதாக டாக்டர் சொன்னாங்க… அனைவரும் பிரார்த்திப்போம்!’: பட்டிமன்ற பேச்சாளர் ராஜாbharathi baskar
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express