சசிகலா உறவினர்கள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களிலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற சோதனை குறித்தும், வருமான வரித்துறை செவ்வாய் கிழமை விளக்கம் அளித்தது.
அந்த விளக்கத்தில் வருமான வரித்துறை தெரிவித்ததாவது,
- வரி ஏய்ப்பு தொடர்பாக பொருளாதார உளவுத்துறை மூலம் கண்காணித்து சோதனை நடத்தப்பட்டது.
- போயஸ் கார்டனில் சசிகலாவின் 4 அறைகள், பூங்குன்றனின் ஒரு அறையில் சோதனை நடைபெற்றது.
- ஜெயலலிதா அறையில் சோதனை நடத்தப்படவில்லை.
- போயஸ் கார்டனில் உறுதியான தகவல், ஆவணங்கள் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
- சோதனையில் 70-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- 15 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
- சசிகலாவின் நான்கு அறைகள், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் ஒரு அறையில் சோதனை நடைபெற்றது.
- பறிமுதல் செய்த ஏராளமான பென்ட்ரைவ்கள், ஒரு லேப்டாப்பை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
- 5 அறைகளின் சாவிகளும் இளவரசியின் மகள் ஷகிலாவின் கணவர் ராஜராஜனிடமிருந்து பெறப்பட்டன.
- பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்.
- வருமான வரித்துறை சோதனையில் 70-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- தமிழக போலீசாரின் உதவியே போதுமானதாக இருந்ததால் துணை ராணுவத்தை நாடவில்லை.