முன்னதாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ளது. தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதை தவிர்க்கும் வகையில், வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் சென்னை உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் திருச்சியிலும் சோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி சக்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி (smt moorthi) என்பவர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்புடன் 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக அரசு பொறுப்பேற்ற முதல் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அரசு பணிகளை இவர் எடுத்து பிரித்து கொடுப்பார் என தகவல் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தேதி நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்காக பணம் பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்சியில் இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று இரவு ஈஸ்வரமூர்த்தி வீட்டில் உள்ளே நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் பணம் பட்டுவாடா செய்வதற்கு இவரது வீட்டில் பணம் இருப்பது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகின்றது.
வருமானவரித்துறை அதிகாரிகள் வருவதற்கு முன் பல லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு இவர் வீட்டில் இருந்து சிலர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது மாமனார் என்.பி.வெங்கடாசலம், மருமகன் ஈஸ்வரமூர்த்தி தி.மு.க, அ.தி.மு.க இரண்டு ஆட்சியிலும் அரசு ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“