சென்னையில் இரண்டு இடங்களில் வருமான வரித்துறை அதிகார்கள் சோதனை நடத்தி வருகின்றனர். நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் போருரில் உள்ள கெப்பல் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் ஒன் பாராமவுண்ட் ஐடி வளாகத்தை ரூ2,100 கோடிக்கு வாங்கிய நிலையில் கெப்பல் நிறுவனத்தில் காலை 7 மணி முதலே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சென்னை போரூர் மற்றும் கங்குவான்சாவடி பகுதிகளில் இன்று காலையில் இருந்தே வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை போரூர் அருகே உள்ள கெப்பல் என்ற தனியார் ஐடி நிறுவனத்தில் இந்த சோதனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதம் போரூரில் உள்ள ஒன் பாராமவுண்ட் ஐ டி வளாகத்தை ரூ.2,100 கோடிக்கு வாங்கிய நிலையில், 12.6 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட கெப்பல் நிறுவனத்தில் ஆய்வு நடத்தப்படுகிறது.
மேலும் சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் வளாகத்தில் உள்ள கேன் ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்திலும் போரூரில் உள்ள பைனான்ஸ் நிறுவனம் மற்றும் ஐடி நிறுவனத்திலும் கந்தன்சாவடியில் உள்ள கேன் ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“