பெண் அதிகாரி, திமுகவினரை தாக்கியதற்கான ஆதாரம் இருந்தால், அவர்கள் சமர்பிக்கட்டும் என்று வருமான வரித்துறை இயக்குநர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு உள்பட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. கரூரில் 26ம் தேதி செந்தில்பாலஜியின் தம்பி அசோக்குமாருக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தச் சென்றனர். ஆனால் அப்போது, கூடியிருந்த திமுகவினர், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திமுகவினர் அதிகாரியின் கார் கண்ணாடியை உடைத்தனர் இதைத்தொடர்ந்து கரூர் காவல்துறை அதிகரிகள்,. வருமான வரித் துறையினரை அழைத்து சென்றனர். இந்நிலையில் வருமான வரித்துறையினர், திமுகவினர் மீது வழக்கு தொடர்ந்தனர். வருமானவரித்துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக வருமானத்துறை இயக்குநர் சிவசங்கரன் பேசுகையில், “ அதிகாரிகளை அவர்கள் அடித்துள்ளனர். இப்போது அதிகாரிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றே மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் அனைவரையும் அடித்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது., வேண்டும் என்றேதான் எங்களை அடித்துள்ளனர். யாருரெல்லாம் அடித்தார்களோ அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர உள்ளோம். இதுவரை 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெண் அதிகாரி ஒருவர் திமுகவினரை அடித்ததாக கூறுவதில் உண்மையில்லை. அப்படி நடந்திருந்தால் அதை நிரூபிக்கச் சொல்லுங்கள். நாங்கள் எப்.ஐ.ஆர் கொடுப்பதற்கு பதில் எப்.ஐ.ஆர் கொடுத்தால், நாங்கள் பயந்து சென்றுவிடுடோம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. இந்த சோதனை தொடரும் “ என்று அவர் தெரிவித்த்துள்ளார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil