ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வருமான வரித்தறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த 2010-11ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, கர்நாடகாவில் உள்ள கூர்க் காபி தோட்டத்தின் மூலம் கிடைத்த வருமானத்திற்கான வரியை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீசை எதிர்த்து சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். மனுவில், 2009-10ம் ஆண்டுக்கான நோட்டீசை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்றும், விவசாய வருமானத்துக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி சிவஞானம், முந்தைய மதிப்பீட்டு ஆண்டுகளில் இதேபோன்று அனுப்பிய நோட்டிசை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதன் அடிப்படையில் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முகாந்திரம் இருப்பதாக தெரிவித்து, தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் மனுவுக்கு பதிலளிக்க வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.