Advertisment

சென்னையில் 23 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
it raid

it raid

சென்னையில் உள்ள தியாகராய நகர், சவுகார் பேட்டை உட்பட  23 இடங்களில் உள்ள தனியார் ஜவுளி கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

காந்தி பிரதர்ஸ் குரூப் என்ற நிறுவனத்துக்கு  சொந்தமான கடைகள்  மற்றும் உரிமையாளரின் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னையில் காந்தி பேப்ரிக்ஸ், காந்தி பேஷன்ஸ், ஜெயின் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட 23 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே காந்தி பிரதர்ஸ் குரூப் மற்றும் ஜெயின் டெக்ஸ்டைல்ஸ் வரி செலுத்தவில்லை என்றும், ஜவுளி மொத்த வியாபாரத்தில் ஈட்டிய பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை நடத்தப்படுகிறது.

பல்லாவரத்தில் உள்ள  கவுதம் மற்றும் அவரின் உறவினர்கள் வீட்டிலும், அவர்களில் 3 நகைக் கடைகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை வேப்பேரியில்  டாக்டர் பிரகாஷ் சந்த் ஜெயின் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

It Raid Income Tax Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment