Advertisment

அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு

சென்னை மற்றும் தருமபுரியில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையில் ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
income tax raid, income tax raid at mc sambath relations places, வருமானவரித் துறை சோதனை, தமிழ்நாடு, எம்சி சம்பத் உறவினர் நிறுவனங்களில் வருமானவரி சோதனை, tamil nadu, tamil nadu assembly elections 2021, எம்சி சம்பத், ஐடி ரெய்டு, IT raid

சென்னை மற்றும் தருமபுரியில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையில் ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறையினர் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில், கடலூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வேட்பாளராக போட்டியிடுகிறார். அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் எம்.சி. சம்பத்தின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமாக சென்னை மற்றும் தருமபுரியில் உள்ள அவர்களுடைய பள்ளி மற்றும் நிதி நிறுவனங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று (மார்ச் 27) மாலை சோதனையில் ஈடுபட்டனர்.

வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய இந்த அதிரடி சோதனையில், அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி இளங்கோவனுக்கு சொந்தமாக தருமபுரியில் உள்ள கல்வி நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதை அடுத்து பல்வேறு இடங்களிலும் சோந்தனை நடத்தப்பட்டது. அதே போல, அவருக்கு சொந்தமான நிதி நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனைகளில் எவ்வளவு பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்ற தகவல்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினு, இந்த சோதனைகளில் ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று முன் தினம், திருவண்ணாமலையில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், ரூ.3.5 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Income Tax Raid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment