scorecardresearch

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஜி ஸ்கொயர்
ஜி ஸ்கொயர்

மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துபட்டு, திருச்சியில் டேப் காம்ப்ளக்ஸ், கர்நாடகா, தெலுங்கானா என 50க்கும் மேற்பட்ட இடங்களில் மதிய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்போடு இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகின்றது.

ஸ்கொயர் நிறுவனம் தென் மாநிலங்களில் கட்டுமானங்களில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மட்டுமே சிஎம்டிஏ சார்பாக வீடுகள் கட்ட உடனடியாக அனுமதி வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது  குற்றம்சாட்டியிருந்தார். அவர் கூறுகையில், ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக சிஎம்டிஏ மாறி இருக்கிறது, பொதுவாக நிலம் அப்ரூவல் ஆக 200 நாட்கள் ஆகும். ஆனால், கோவையில் 125 ஏக்கர் நிலத்திற்கு எட்டு நாட்களிலேயே டிடிசிபி மத்திய,  அரசின் ரேரா உட்பட அனைத்து அனுமதியும் கிடைத்திருக்கிறது.

முதல்வரின் உறவினர்கள் பலரும் இந்த அமைப்புகளில் வந்துவிட்டார்கள். ஆன்லைன் மூலம் மட்டுமே நிலத்துக்கு அப்ரூவல் வழங்கப்படும் என திமுக அரசு தெரிவித்திருந்தது. எப்போதெல்லாம் ஜி ஸ்கொயர்  ஆவணங்களை சமர்ப்பிக்கிறார்களோ அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மட்டுமே இந்த லிங்க் ஓபன் ஆகும் நிலை இருப்பதாக தெரிவித்தார். இந்தநிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜி ஸ்கொயர் மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது சோதனை நடைபெற்று வருவதும், இந்த சோதனை சம்பவம் ஆளும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் ஜி ஸ்கொயர் தெரிவிக்கையில்; எங்களது சொத்து 38 ஆயிரம் கோடி என அண்ணாமலை வெளியிட்டு இருப்பது தவறானது.  திமுக ஆட்சி அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் ரியல் எஸ்டேட் துறையில் வியாபாரம் செய்து வருகிறோம் என்றும், தங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானவை என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

செய்தி : க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Income tax raid g square chennai