2024 ஆம் ஆண்டுக்கான பருவ கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவின்டாலுக்கு 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிச்சாமி, “தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கொப்பரைக் கொள்முதல் விலை உயர்வு இருந்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
/indian-express-tamil/media/media_files/H2mSg6ErdR7BH5QiT3Sf.jpg)
தொடர்ந்து, இந்தியா முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை அரசு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
இந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றும் பட்சத்தில் மாநில அரசும் இணைந்து செயல்படுவார்கள் எனவும் இதனால் விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“