/indian-express-tamil/media/media_files/FCbfwkDgiOJzkiC55cpx.jpg)
பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைக்க, கோவை வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மண் கிண்ணம் வழங்கினர்.
கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைக்க, கோவை வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மண் கிண்ணம் வழங்கினர்.
கோடை காலம் தொடங்கிய நிலையில் உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் வனப் பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் வனத்துறை சார்பில் வனப்பகுதி ஒட்டி தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பேரூர், வடவள்ளி, செல்வபுரம், தொண்டாமுத்தூர், மதுக்கரை, குனியமுத்தூர், சுந்தராபுரம், சரவணம்பட்டி கணபதி போன்ற பகுதிகளில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மண் கிண்ணங்கள் இலவசமாக வழங்கி வரும் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையினர்.
பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் அதனை வாங்கி வீட்டில் மொட்டை மாடி, மரத்துக்கு அடியில் போன்ற பகுதிகளில் பறவைகளுக்கு சிறுதானிய உணவுகள், தண்ணீர் வைத்து வருகின்றனர்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.