/indian-express-tamil/media/media_files/WlZ8hRCQOC4noac7820i.jpg)
சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.4,301-ஆக இருந்த விமான கட்டணம் இன்றும், நாளையும் ரூ.10,796 ஆக உயர்ந்துள்ளது.
சுதந்திர தினம் நாளை வியாழக்கிழமை (ஆக.15) நடுமுழுதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாளை வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் பயணிகள் செல்ல இருக்கிறார்கள்.
இந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு ஏரளமான மக்கள் பயணப்பட இருப்பதால் டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. இது விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.4,301-ஆக இருந்த விமான கட்டணம் இன்றும், நாளையும் ரூ.10,796 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4,063 ஆக இருந்த விமான கட்டணம், இன்றும், நாளையும் கட்டணம் ரூ.11,716ஆக அதிகரித்துள்ளது. சென்னை திருச்சி கட்டணம் ரூ.7,192 ஆகவும், சென்னை கோவை விமான கட்டணம் ரூ.5,349 ஆகவும் உயர்ந்துள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.