கோவை மத்திய சிறையில் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை, தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என்று 2,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனி சிறைகள் உள்ளன.
இதற்கிடையே ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்துக்கு நன்னடத்தை அடிப்படையில் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 15 சிறை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் தண்டனை முடியும் நாளுக்கு முன்கூட்டியே விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி கோவை சிறையில் 7 ஆண் கைதிகள், ஒரு பெண் கைதி என்று 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து நேற்று அந்த 8 பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்களது வீடுகளுக்கு திரும்பினார்கள்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“