73-வது சுதந்திர தின விழாவை சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் இந்திய கொடியை ஏற்றிவைத்தார்.
கொடி ஏற்பு நிகழ்விற்கு பின்பு, முதல்வர் சிறப்புரை ஆற்றினார். தமிழக அரசின் சார்பில் மக்களுக்கான சில முக்கிய அறிவிப்புகளையும் அறிவித்தார்.
இந்திய சுதந்திரக்கு போராட்டத்திற்கு உதவிய தமிழகத்தை சேர்ந்த தியாகிகளை முதல்வர் நினைவு கூர்ந்தது, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மக்களின் அடிப்படைத் தேவைகளை இந்த அரசு எப்போதும் கண்ணும் கருத்துமாய் உள்ளது என்ற வாதத்தையும் முன்வைத்தார். குறிப்பாக, பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களை தூர்வாரும் நடவடிக்கையால் மக்களின் தண்ணீர் பிரச்சனை சரி செய்யப்படும் என்று கூறினார்.
நிர்வாகத் திறனுக்காக வேலூர் மாவட்டத்தை மூன்று மாவட்டமாக பிரிக்கப்படும் என்று அறிவித்தார். இதன்மூலம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என புதிய மாவட்டங்கள் உதயமாகும். கோதாவரி ஆற்றினை காவேரி ஆற்றுடன் விரைவாக செயல்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். 2000 புதிய அரசு பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
சுதந்திரம் பெற்றோம் என்பதோடு மற்றும் நின்று விடாமல் அடுத்த தலைமுறையினருக்கு இந்த சுதந்திரத்தை எப்படி கொண்டு செல்வது என்ற கனவோடு நடைபோட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அரசின் செயல் திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் மனது வைத்தால் தான் நாடும், வீடும் செழிக்கும் என்று சொல்லி தனது உரையை முடித்தார்.
பின், தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மக்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தார்.