சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஆண்டுதோறும் மாநில ஆளுநர்கள் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டும் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ், வி.சி.க, சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
தமிழக காங்கிரஸ் கட்சி கூறுகையில், சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் புறக்கணிக்கிறது. பதவிக்காலம் முடிந்தும் ஆர்.என்.ரவி ஆளுநராக தொடர்வது அரசியலைப்புக்கு எதிரனாது. தமிழ்நாட்டின் நலனுக்கும், அரசுக்கு எதிராகவே ஆளுநரின் செயல்பாடுகள் இருக்கின்றன என்று கூறியுள்ளது.
தொடர்ந்து, சி.பி.எம் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக ஆளுநர் உள்ளார் என்று கூறி தேநீர் விருந்த புறக்கணிப்பதாக கூறினார்.
மாநில அரசுக்கு எதிராகவும், சட்டமன்றத்தில் நீட் விலக்கு வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமலும் ஆளுநர் இருப்பதால் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கிறோம் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இதே போக்குடன் ஆளுநர் செயல்பாடுகள் இருந்து வருவதால் இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க, ம.ம.க உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“