சுதந்திர தினம் மற்றும், சனி, ஞாயிறு தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்க உள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (ஆக.14) 470 பேருந்துகளும், ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் 365 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 70 பேருந்துகளும், ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் 65 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
அதே போன்று பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 14, 16, 17, 18 ஆகிய நாட்களுக்கு 20 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஞாயிறன்று சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் இந்த பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்து கொள்ளுமாறு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“