Advertisment

சுதந்திர நாள்: 7 பெண் அதிகாரிகள் உள்பட 15 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம் - தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்படும் காவல்துறை அதிகாரிகளின் பெயர்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Two Tamil Nadu cadre IAS officers transferred to centre, Krishnan IAS, Neeraj Mittal IAS, தமிழக பிரிவு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றம், கிருஷ்ணன் ஐஏஎஸ், நீரஜ் மிட்டல் ஐஏஎஸ், Two Tamil Nadu cadre IAS officers transferred to central govt, who are they

தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்படும் காவல்துறை அதிகாரிகளின் பெயர்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்படும் காவல்துறை அதிகாரிகளின் பெயர்களை  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Advertisment

சுதந்திர தினத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணி வகுப்பு மரியாதையை ஏற்று பார்வையிடுவார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். 

இந்த ஆண்டு இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டில் புலன் விசாரணையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் விதமாக 7 பெண் அதிகாரிகள் உள்பட 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவ்ல புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல் துறை அதிகாரிகள் 2024-ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்:

1. கி. புனிதா, காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், வேலூர் மாவட்டம்.

2. து. வினோத்குமார், காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, சென்னை.

3. ச. செளமியா, காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, கடலூர் மாவட்டம்.

4. ஐ. சொர்ணவள்ளி, காவல்ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், திருப்பூர் மாநகரம்.

5. நா. பார்வதி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.

6. பெ. ராதா, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, திருப்பூர்.

7. செ. புகழேந்தி கணேஷ், காவல் துணை கண்காணிப்பாளர், செங்கல்பட்டு உட்கோட்டம், செங்கல்பட்டு மாவட்டம்.

8. ரா.தெய்வராணி, காவல் ஆய்வாளர், பெருந்துறை காவல் வட்டம், ஈரோடு மாவட்டம்.

9. ஆ. அன்பரசி, காவல் ஆய்வாளர், பொன்னை காவல் நிலையம், வேலுார் மாவட்டம்.

10. நா.சுரேஷ், துணை காவல் கண்காணிப்பாளர், ஊரக உட்கோட்டம், தூத்துக்குடி மாவட்டம்.

இதே போன்று, பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2024-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும்:

1. தா.ச. அன்பு. இ.கா.ப., காவல் துறை தலைவர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை, சென்னை.

2. இ. கார்த்திக், இ.கா.பா., காவல் கண்காணிப்பாளர்-I, தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை.

3. சி.ர. பூபதிராஜன், துணைக் காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்பபுலனாய்வுத் துறை, சேலம் சரகம்.

4. க. சீனிவாசன், காவல் ஆய்வாளர் (தொ.நு.), காவல் தொலைத்தொடர்பு பிரிவு, சென்னை.

5. பு.வ. முபைதுல்லாஹ், காவல் உதவி ஆய்வாளர், உள்வட்ட பாதுகாப்பு பிரிவு, அயல்பணி திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு, தலைமையகம், சென்னை.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

மேற்கண்ட விருதுகள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment