Advertisment

சிதம்பரத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி; இந்தியா கூட்டணி கட்சியினர் கைது

சுவாமி சகஜானந்தாவின் கொள்கைகளை களவாட நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக ஆளுநரைக் கண்டித்து முழக்கம்; சிதம்பரத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் கைது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RN Ravi Chidambaram INDIA

சிதம்பரத்தில் நடைபெற்ற, சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க இன்று (ஜனவரி 27) காலை சிதம்பரம் வருகை தந்தார்.

Advertisment

இந்நிலையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சிதம்பரம் மேல வீதி அண்ணா சிலை அருகே, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.

இதில், மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூஸா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் குமரன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் மக்கின், மாநில நிர்வாகி ஜெமினி ராதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் சேகர், வட்ட செயலாளர் தமீமுன் அன்சாரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ் ஒளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில், சுவாமி சகஜானந்தாவின் கொள்கைகளை களவாட நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக ஆளுநரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை சிதம்பரம் டி.எஸ்.பி லாமேக் தலைமையிலான போலீசஸார் கைது செய்தனர்.

Advertisment
Advertisement

க.சண்முகவடிவேல்

Chidambaram Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment