சீனத் தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணம்: மோடி- தலைவர்கள் இரங்கல்

லாடாக் எல்லையில் சீன ராணுவத் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் பழனி உள்பட 3 பேர் வீர மரணம் அடைந்தனர். வீரர்களின் மரணத்துக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

By: Updated: June 16, 2020, 07:25:31 PM

லாடாக் எல்லையில் சீன ராணுவத் தாக்குதலில் ஒரு ராணுவ அதிகாரி, தமிழக ராணுவ வீரர் பழனி உள்பட 3 பேர் வீர மரணம் அடைந்தனர். வீரர்களின் மரணத்துக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எல்லையில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – ராணுவத்துக்கு இடையே நேற்று இரவு நடந்த வன்முறையில், சீன ராணுவத் தாக்குதலில் இந்தியா தரப்பில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி (40) வீர மரணம் அடைந்தார். இவர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

சீன ராணுவத் தாக்குதலில் வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதே போல, இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் உள்பட இந்திய வீரர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி இந்திய சீன எல்லையில் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேரி உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


அதே போல, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “லடாக் எல்லைப் பகுதியில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் – கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் பழனி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். வீரமரணம் எய்திய பழனிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “லடாக்கில் நடந்துவரும் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய இராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம்! 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி,தனது உயிரையும் ஈந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ அதிகாரி உள்ளிட்ட வீரர்களின் தியாகம் எனக்குள் ஏற்படுத்தும் வலியை சொல்ல வார்த்தைகள் இல்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; இந்த கடினமான காலகட்டத்தில் நாங்கள் உங்களுக்கு துணையாக நிற்போம்” என்று தெரிவித்துள்ளார்.


அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், “சீன ராணுவத்தின் கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ ஹவில்தார் பழனி உள்ளிட்ட மூன்று பேருக்கும் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:India china border fights 3 soldiers dead tamil nadu soldier dead pm modi cm palaniswami mk stalin condolence

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X