நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் செல் உள்நாட்டு நீர்வழிக் கப்பலை மோடி இன்று தொடங்கி வைத்தார் .
தூத்துக்குடியில் ரூ.17, 300 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இன்று காலை மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்ற மோடி, ரூ 17,300 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வளர்ச்சி நலத் திட்டங்களை அடிக்கல் நாட்டி, தொங்கி வைத்தார்.
இதில் முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரெஜன் எரிபொருள் உள்நாட்டு நீர்வழிக் கப்பலின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். இந்த கப்பல் கொச்சி கப்பல் தளத்தில் தயாரிக்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு பெட்டக முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் வகையில் கட்டமைக்கப்பட இருக்கும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி மையம் போன்ற பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“